கனேடிய மக்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிக்கவிருக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவை அறிவிப்பார்
ட்ரூடோ வெளியேறுவது தொடர்பில் உறுதியான முடிவை எப்போது அறிவிப்பார் என்பதில் இதுவரை தகவல் இல்லை என்றும், ஆனால் புதன்கிழமை ஒரு முக்கிய தேசிய காக்கஸ் கூட்டத்திற்கு முன்பு அவர் தனது முடிவை கட்டயாம் அறிவிக்க இருக்கிறார் என்றே தகவல் கசிந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கனேடிய பிரதமரின் அலுவலகமும் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவிருக்கும் நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் வரையில் நாட்டின் பிரதமராகத் தொடர்வாரா அல்லது உடனடியாக பதவி விலகுவாரா என்பது குறித்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
2013ல் கட்சி கடும் சிக்கலில் இருந்தபோது ட்ரூடோ லிபரல் தலைவராக பொறுப்பேற்றார். மட்டுமின்றி ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் முதல் முறையாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
நிதியமைச்சர் டொமினிக்
தற்போதைய நெருக்கடியான சூழலில் கன்சர்வேடிவ்களிடம் லிபரல் கட்சி மோசமாக தோல்வியடையும் என்று கருத்துக் கணிப்புகள் சுட்டில்காட்டும் நேரத்தில் ட்ரூடோவின் விலகல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
மட்டுமின்றி, ட்ரூடோவின் ராஜினாமா, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தை சமாளிக்கக்கூடிய அரசாங்கத்தை அமைக்க விரைவான தேர்தலுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்குடன், இடைக்காலத் தலைவராகவும், பிரதமராகவும் பதவியேற்க விரும்புவது குறித்து பிரதமர் ட்ரூடோ கலந்துரையாடியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |