வடகொரியாவின் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்ள புதிய யுக்தி: கனேடிய பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு
ஜி7 மாநாடு பல்வேறு விடயங்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முக்கிய சந்திப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஜி7 மாநாடு
ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டில் உலகத்தலைவர்களுடன் கலந்துகொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களுடன் பல்வேறு விவாதங்களை நடத்தினார்.
அப்போது ரஷ்யா - உக்ரைன் போர், வடகொரியாவின் ஆயுதங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். ஜி7 மாநாடு குறித்து அவர் கூறுகையில், 'சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கையாள்வது, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நிதி உறுதியற்ற தன்மையை நிர்வகித்தல் மற்றும் பல, நாம் ஒன்றிணைந்து பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஜி7 ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக உள்ளது.
நாங்கள் ஒரு குழுவாக உலகளாவிய பிரச்சனைகளை சமாளிக்கப் போகிறோம். அதைத்தான் நாங்கள் செய்ய இருக்கிறோம். எனவே வேலையில் இறங்குவோம். ரஷ்யாவை கணக்கில் வைத்திருக்கிறோம். உக்ரைனின் வீரமிக்க எதிர்ப்பை ஆதரிப்பதற்கு நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்' என தெரிவித்தார்.
புதிய நிதியுதவி
மேலும் அவர், 'நான் செய்தியாளர்களிடம் பேசினேன். ரஷ்யா மற்றும் உக்ரைனில் நடந்த கொடூரமான போருக்கு காரணமானவர்கள் மீது தொடர்ந்து கணக்கு வைக்க எங்கள் தடைகளை அதிகரிப்போம் என்று அறிவித்தேன்' என குறிப்பிட்டார்.
வடகொரியா குறித்து ட்ரூடோ கூறுகையில், 'வடகொரியாவின் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்ள புதிய நிதியுதவியை நாங்கள் அறிவிக்கிறோம்' என தெரிவித்தார்.
Adrian Wyld/The Canadian Press
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.