ஒரு பெண்ணின் மரணத்திற்கு உலகெங்கிலும் ஒன்று திரண்ட மக்கள்! கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய நகரில் மாஷா அமினிக்கு நீதி வேண்டி ஒன்று திரண்ட மக்கள்
ஈரானியர்களுக்காக மக்கள் ஒற்றுமையாக நிற்பதை குறிப்பிட்ட கனேடிய பிரதமர் ட்ரூடோ
மாஷா அமினியின் மரணத்திற்கு உலகெங்கிலும் மக்கள் ஒன்று திரண்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஈரானில் இளம்பெண் மாஷா அமினி மரணமடைந்ததால் அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. இதில் பலர் பலியான நிலையில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் கனடாவில் ஆயிரக்கணக்கானோர் மாஷா அமினிக்கு நீதி வேண்டி பேரணி நடத்தினர். அவர்களில் பலர் தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், கனடா பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினர்.
கனேடிய கருவூல வாரியத்தின் தலைவரான மோனா ஃபார்டியர் வெளியிட்ட பதிவில், ஒட்டாவாவில் நாங்கள் மாஷா அமினிக்காகவும், ஈரானில் துன்புறுத்தலுக்கு எதிராக, சுதந்திர வாழ்க்கைக்காக போராடும் அனைத்து துணிச்சலான பெண்களுக்காகவும் ஒற்றுமையாக ஊர்வலம் சென்றோம் என பதிவிட்டார்.
Women’s rights are human rights.
— Mona Fortier ?? (@MonaFortier) October 1, 2022
In #Ottawa we marched in solidarity with #MahsaAmini and all the brave women fighting against persecution in #Iran. #WomenLifeFreedom pic.twitter.com/KOFX1RVchz
இதனை குறிப்பிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், 'மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஈரானியர்களுக்காகவும் உலகெங்கிலும் மக்கள் ஒற்றுமையாக நிற்கிறார்கள்.
கனடா டஜன் கணக்கான நபர்களை அனுமதித்துள்ளது. மற்றும் ஈரானில் உள்ள நிறுவனங்கள், அதன் நடவடிக்கைகளுக்கு ஆட்சியை பொறுப்பேற்க வைக்கும்' என தெரிவித்துள்ளார்.
Getty Images