கனேடியர்கள், துருக்கியர்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த எதிர்நோக்குகிறேன்: மீண்டும் வென்ற எர்டோகனுக்கு ட்ரூடோ வாழ்த்து
துருக்கியில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய எர்டோகனுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து கூறியுள்ளார்.
எர்டோகன் மீண்டும் வெற்றி
துருக்கி நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளார். அவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த நிலையில், இந்த வெற்றியின் மூலம் மேலும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை தொடருவார்.
எர்டோகனுக்கு உலக நாடுகளின் தலைவர்களான ரிஷி சுனக், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, விளாடிமிர் புடின் ஆகியோர் வாழ்த்து கூறினர்.
ஜஸ்டின் ட்ரூடோவின் வாழ்த்து
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'இன்றைய தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி எர்டோகனுக்கு வாழ்த்துக்கள். நமது நாடுகள் நெருங்கிய உறவுகளால் ஒன்றுபட்ட நெருங்கிய நண்பர்கள். இந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் கனேடியர்கள் மற்றும் துருக்கியர்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் நான் எதிர்நோக்குகிறேன்' என கூறியுள்ளார்.
Félicitations, président @RTErdogan, pour les résultats électoraux d’aujourd’hui. Nos pays sont de proches partenaires unis par des liens étroits. J’ai hâte de renforcer davantage ce partenariat et de réaliser des progrès pour les Canadiens et les Turcs. https://t.co/JERvLg5amb
— Justin Trudeau (@JustinTrudeau) May 29, 2023