பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை? வெளியான தகவல்
பாஜகவின் தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை
அதிமுக-பாஜக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் போட்டியில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமை
எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லி பாஜக தலைமையிடம் சில நிபந்தனைகளை விதித்தாக செய்திகள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழக பாஜக தலைமையை மாற்ற டெல்லி பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதால் இந்த நீக்கம் நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |