போதைப்பொருள் பயன்படுத்தியதால் தடை செய்யப்பட்டேன் - குஜராத் அணி வீரர் காகிசோ ரபாடா
தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவை(Kagiso Rabada), ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.
காகிசோ ரபாடா
2025 ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரபாடா, அதன் பிறகு அவர் சொந்த காரணங்களுக்காக தென்ஆப்பிரிக்காவிற்கு செல்வதாக குஜராத் அணி அறிவித்தது.
இந்த நிலையில், போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் பயன்படுத்தியதால் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துவதாகவும், கிரிக்கெட் விளையாட்டை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும், விரைவில் கிரிக்கெட்டுக்குத் திரும்புவேன் என்றும் நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட காலம் குறிப்பிடப்படாத நிலையில், ஐபிஎல் தொடரின் குஜராத் அணி விளையாட உள்ள எஞ்சியுள்ள போட்டிகளில் ரபாடா பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |