16 வயதில் கோடிக்கணக்கான சொத்து! தற்கொலை செய்து கொண்ட டீன் ஏஜ் இளம்பெண்
அமெரிக்காவை சேர்ந்த 16 வயதான நடிகையும், கோடீஸ்வரியுமான கைலியா போசே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Toddlers and Tiaras என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கைலியா. இவரின் சொத்து மதிப்பு $1.5 மில்லியன் ஆகும். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குடும்பத்தார் தெரிவித்துள்ளார்.
கைலியா குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறமையான பெண்ணான கைலியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருந்தது. துரதிஷ்டவசமாக பூமியில் வாழக்கூடிய வாழ்வை அவள் முடித்து கொண்டாள்.
கைலியாவின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துள்ளது. எங்களிடம் இதை சொல்ல வார்த்தைகளே இல்லை, இந்த சமயத்தில் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைலியா எதற்காக தற்கொலை செய்தார் மற்றும் அது தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.