ரூ.400 மாத சம்பளத்தில் தொடங்கி.. இன்று Software துறையில் பல ஆயிரம் கோடிகளில் வருமானம்: யார் இவர்?
வறுமையின் காரணமாக தனது 9 -ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய ஒருவர், இன்று ரூ.1.40 லட்சம் கோடி வருமானம் பெறுகிறார். அவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
யார் இவர்?
இந்திய மாநிலம், மகாராஷ்டிராவின் ரஹிமத்பூரில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கைலாஷ் கட்கர். இவர் படிப்பில் சராசரியான மாணவர் என்றாலும், பல சிரமங்களை எதிர்கொண்டதால் 9 -ம் வகுப்பில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
பின்பு, ரூ.400 மாத சம்பளத்திற்கு ரேடியோ மற்றும் கால்குலேட்டர் பழுதுபார்க்கும் கடையில் வேலைக்கு சேர்ந்தார். இதனைத்தொடர்ந்து கடையில் கிடைத்த அனுபவத்தை வைத்து, கடந்த 1991 -ம் ஆண்டு புனேவில் ரூ.15 ஆயிரத்தை வைத்து சொந்தமாக கடையை தொடங்கினார்.
அப்போது, இவருடைய தம்பி சஞ்சய் கட்கர் தனது பள்ளி படிப்பை தொடர சிரமப்பட்டார். அந்த நேரத்தில் நான் உனக்கு பணம் தருகிறேன், நீ படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தம்பியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.
Computer Service நிறுவனம் தொடக்கம்
இதன் பின், கைலாஷ் கட்கர் தனது 22 வயதில் முதன்முறையாக கம்ப்யூட்டர் ஒன்றை வங்கியில் வைத்து பார்த்தார். அப்போது, எதிர்காலம் கணினியால் தான் இருக்க போகிறது என்பதை அறிந்த இவர், ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார்.
இதனைத்தொடர்ந்து, 1993 -ம் ஆண்டு சி.ஏ.டி. கம்ப்யூட்டர் சர்வீசஸ் என்னும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அங்கு, பழுதுபார்க்க வரும் கணினி அனைத்தும் வைரஸால் பாதிக்கப்பட்டதை அறிந்தார். பின்னர், தனது தம்பியிடம் வைரஸ் துறையில் கவனம் செலுத்துமாறு கூறினார்.
அதன்படி, கைலாஷ் கட்கர் மற்றும் சஞ்சய் கட்கர் இருவரும் இணைந்து ஆண்டி வைரஸ் ஒன்றை உருவாக்கி, கணினியில் சோதனை மேற்கொண்ட போது அது வெற்றியடைந்தது. இதனால், ஹார்டுவேர் சர்வீசில் இருந்து ஆன்டி வைரஸ் சாப்ட்வேருக்கு மாற தொடங்கினர்.
ரூ.1.40 லட்சம் கோடி வருமானம்
இந்த இரண்டு சகோதரர்களும் கடந்த 1995 -ம் ஆண்டு, தங்களது முதல் தயாரிப்பான Quick Heal-ஐ ரூ.7,000 -க்கு அறிமுகம் செய்தனர். இது, இவர்களுக்கு வர்த்தக துறையில் பல கதவுகளை திறந்தது. இதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட இந்த சகோதரர்கள் வேகமாக வளர்ச்சியடைந்தனர்.
தற்போது, Quick Heal Technologies Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கைலாஷ் கட்கரும், இணை நிர்வாக இயக்குனராக சஞ்சய் கட்கரும் உள்ளனர்.
2023 -ம் ஆண்டு நிலவரப்படி இவர்களது நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடியை எட்டியது.
இதனைத்தொடர்ந்து, 2010 -ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள மதுரையில் கிளை அலுவலகத்தை திறந்தனர். தொடர்ந்து, 2012 -ம் ஆண்டு ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலும், 2013 -ம் ஆண்டு ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் அலுவலகங்கள் திறந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |