காஜல் அகர்வால் கிடுகிடுவென உடல் எடையை இப்படித்தான் குறைத்தாராம்: வெளியான சீக்ரெட் தகவல்!
நடிகை காஜல் அகர்வால் கிடுகிடுவென உடல் எடையை குறைத்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார்.
கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, இத்தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இக்குழந்தைக்கு அவர்கள் நீல் என்று பெயர் வைத்தனர்.
குழந்தை பிறந்த பிறகு சினிமாவிலிருந்து சற்று விலகியிருந்த காஜல் அகர்வால் தற்போது சினிமாவிலி பிசியாகிவிட்டார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். மேலும், தெலுங்கில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
உடல் எடை குறைத்தது எப்படி?
தற்போது, சமூகவலைத்தளங்களில் காஜல் அகர்வால் கர்ப்பமான பிறகு 70 கிலோ வரை எடை கூடினார். எப்படி உடல் எடையை குறைத்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தை பெற்ற பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சியில் இறங்கினார். மேலும், தன்னுடைய உணவு பட்டியலை முழுவதும் மாற்றினார். காலையில் வெறும் வேக வைத்த முட்டையும், ஊற வைத்த நட்ஸும், பழங்கள், ஜூஸ், ஸ்மூத்தி, சாலட், கீரை என தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
மதியம் சாப்பாட்டுக்கு பிரவுன் ரைஸ்ஸும், அதனுடன் வேகவைத்த காய்கறிகளையும், சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்து வந்துள்ளார். வெந்நீர் குடித்து வந்ததால் அவருடைய தொப்பை கிடுகிடுவென குறைந்தது.
மேலும், தினமும் 2 முறை யோகா பயிற்சி செய்து, சிறு, சிறு உடற்பயிற்சியும் செய்து வந்துள்ளார்.
காலையில் 150 முறை சூரிய நமஸ்காரமும், இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சியும் மேற்கொண்டு வந்துள்ளார்.
இதனால், மிக விரைவாகவே அவர் உடல் எடையை ரொம்ப ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |