வித்தைகள் கற்ற எனக்கு திமிர் அதிகம் தான்: கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் வாக்குமூலம்
“பரத நாட்டியத்தில் வித்தைகள் கற்ற எனக்கு திமிர் அதிகம் தான்” என குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாஷேத்ரா நிறுவனத்தின் பேராசிரியர் ஹரிபத்மன் பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஹரிபத்மன் கைது
கலை கல்லூரியான கலாஷேத்ராவில் பயிலும் மாணவியர் அங்குள்ள பேராசிரியர்கள் சிலர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ள தமிழக பொலிஸார், தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை தேடி வந்தனர்.
Express
இந்நிலையில், சென்னை மாதவரத்தில் தோழி வீட்டில் தங்கிருந்த ஹரிபத்மனை பொலிஸார் அதிரடியாக கைது செய்து, விசாரணைக்காக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மனச் சிதறல் இருக்க கூடாது
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேராசிரியர் ஹரிபத்மன் தெரிவித்த விஷயங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதில், பரத நாட்டியம் என்பது வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களை கற்றுக் கொள்வது போல் கற்றுக் கொள்ள முடியாது, பரதம் உடல் முழுவதும் அசைவுகளை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான கலை, அதை கற்கும் போது பெண்கள் முதலில் தங்கள் கூச்சங்களை விட வேண்டும்.
பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளும் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும், எனவே அதை கற்றுக் கொடுக்கும் போது மாணவியருக்கு இடுப்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் அசைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கற்பிக்க வேண்டியது அவசியம்.
அப்போது எதிர்பார்த்த வடிவம் இல்லை என்றால் உடலின் சில பகுதிகளில் கை வைத்து தான் கற்றுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கலையை கற்கும் போது ஆசிரியருக்கும் மாணவருக்கும் கலையின் மீது மட்டுமே கவனம் இருக்கும், அப்போது இருவருக்குமே மனச் சிதறல் இருக்காது, இருக்க கூடாது, அவ்வாறு யாரும் அதை தவறாக பார்த்தால் கலையை கற்றுக் கொள்ள முடியாது.
சில நேரங்களில் பரத நாட்டியத்தில் கை விரல் மூலமாக காட்டப்படும் முத்திரைகளில் தவறு இருந்தால், அதை தொட்டு தான் சரி செய்ய முடியும். அவற்றையே தற்போது தவறு என்று கூறி மாணவியர் என்பது புகார் அளித்துள்ளனர்.
வீட்டிற்கு மாணவியர்களை அழைத்து சென்றதை குற்றமாக கூறுகிறார்கள், ஆனால் மாணவியர் வீட்டிற்கு வரும் போது எனது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட அனைவரும் உடன் இருந்துள்ளனர்.
நான் தவறானவன் என்றால், இத்தனை புகார்களுக்கு பிறகும் எனது குடும்பத்தினர் எனக்காக உதவி செய்ய ஓடி வருவார்களா? என தெரிவித்துள்ளார்.
“நான் திமிர் பிடித்தவன் தான்”
மேலும், மாணவியருக்கு மெஜெஷ் அனுப்பியதாக குற்றம் சாட்டுகிறார், நான் அவர்களுக்கு அனுப்பிய மெஜேஷ்களில் தவறான எண்ணம் எதுவும் இருப்பதாக தெரிந்தால், நான் நிச்சயம் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்.
சில விஷயங்களை எடுத்துக் கூறினால், என்னை திமிர் பிடித்தவன் என்று நினைக்கிறார்கள். பரத நாட்டியத்தில் வித்தைகள் கற்ற எனக்கு திமிர் அதிகம் தான் எனவும் தெரிவித்துள்ளார்.
India today
பரதநாட்டியத்தில் பெண்களே சிறந்தவர்கள் என்று பொது எண்ண உள்ளது, ஆனால் அதில் நான் மிகவும் நேர்த்தியாக இருப்பதால் என் மீது பேராசிரியைகள் பலருக்கும் என் மீது பொறாமை உள்ளது.
கலாஷேத்ராவில் பேராசிரியர்கள் மத்தியில் தொழில் போட்டி மட்டுமல்லாமல் அதிகாரப் போட்டியும் அதிகமாக உள்ளது. ஆனால் என் தொழில் மீது எனது திறமை மீதும் எனக்கு நம்பிக்கையோடு திமிரும் அதிகமாக உள்ளது.
எனவே இந்த அதிகார போட்டியில், சிலர் என்னை இந்த புகாரில் தள்ளி இருப்பதாக உணருகிறேன், நியாமாக விசாரித்தால் உண்மை வெளிப்படும் என்று பேராசிரியர் ஹரிபத்மன் பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.