கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் மரணம்.., குஷ்பு தலைமையில் விசாரணை குழு அமைத்த மகளிர் ஆணையம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக குஷ்பு தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மரணம்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதில், தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகள் உட்பட 20 -க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதை விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை குழு அமைப்பு
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.
ஊடங்களில் வந்த செய்திகளின் அடைப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த குழுவின் தலைவராக குஷ்புவை நியமனம் செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |