மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம்! புதைப்பதற்கு முன் உடலோடு சேர்த்து கட்டப்பட்ட ஒரு பொருள்... புகைப்படங்கள்
பள்ளிக்கூட பாடப்புத்தகங்களுடன் ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த கடலூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூன் 12ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ஆனால் பள்ளியில் 3 வது மாடியில் இருந்து குதித்து மாணவி, தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி தரப்பில் செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேக இருப்பதாக கூறி அவரது பெற்றோர், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இரு முறை ஸ்ரீமதியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெற்றோர் உடலை வாங்கினர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான் பெரிய நெசலூருக்கு கொண்டுவரப்பட்டது.

மாணவியின் வீட்டிலிருந்து மயானம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. வாகனத்தில் வைத்து மயானத்திற்கு மாணவி உடல் கொண்டுசெல்லப்பட்டது. அப்போது வாகனத்தின் முன்னும் பின்னும் பெற்றோர், உறவினர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் சென்றனர்.
முதலில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது . திடீரென்று அந்த முடிவு மாற்றப்பட்டு, புதைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஏனெனில் பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உறவினர்கள் தரப்பில் புதைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இறுதி ஊர்வலம் முடிந்து மாணவியின் உடல் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுடுக்காட்டில் உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். மாணவியின் தந்தை கண்ணீர் மல்க , உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தார். பின்னர் மாணவியின் ஆத்மா சாந்தியடையும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதைக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீமதி உடல் மீது உயிரியல் விலங்கியல் புத்தகம் (Zoology, Botany book) வைத்து புதைக்கப்பட்டது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        