என்ன சார் லாஜிக் இருக்கு.. பொலிஸுக்கு தெரியாமல் எப்படி? கள்ளச்சாராய விவகாரத்தில் குஷ்பு ஆவேசம்
தினக்கூலி தொழிலாளர்களுக்கு கள்ளச்சாராயம் கிடைக்கிறது என்றால் பொலிஸுக்கு எப்படி தெரியாமல் இருக்கும் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
குஷ்பு தலைமையில் குழு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகள் உட்பட 20 -க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதை விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.
குஷ்பு ஆவேசம்
இந்நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு குஷ்பு உள்ளிட்டோர் சென்று பொலிஸாரிடம் கேள்விகளை கேட்டனர்.
அப்போது குஷ்பு பேசுகையில், "அந்த பெண்ணிற்கு 20 வயது தான் ஆகிறது. அவரது கணவர் இறந்துவிட்டார். இன்னொரு பெண்ணான 6 மாத கர்ப்பிணியின் கணவரும் இறந்துவிட்டார்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள். இப்போது அவர்கள் இல்லாததால் அவர்களது குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது.
தினக்கூலி வேலை செய்யும் 130 பேருக்கு கள்ளச்சாராயம் எளிதாக கிடைக்கிறது என்றால், பொலிஸுக்கு தெரியாமல் எப்படி? உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க, என்ன லாஜிக் இருக்கிறது" என்றார்.
அதற்கு பதிலளித்த பொலிஸார், "கள்ளச்சாராய வழக்கில் குற்றவாளிகளை அடுத்தடுத்து கைது செய்து வருகிறோம்" என்றனர்.
அதற்கு, நீங்கள் கைது செய்தால் அவர்களுக்கு யாராவது உதவி செய்து ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். அவர்கள் திருந்துவதற்கு தண்டனை கிடைப்பதில்லை என்று குஷ்பு கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |