மாணவி ஸ்ரீமதியின் உடலை தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சி.. கள்ளக்குறிச்சி வழக்கில் திடீர் திருப்பம்!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பில் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்படவுள்ளது.
சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய சிசிடிவி காட்சியில் பள்ளியின் விடுதியில் கீழே விழுந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து மாணவி ஸ்ரீமதியின் உடலை, நைட்டி அணிந்த நான்கு பெண்கள் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சி காலை 5.23 மணியளவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சி வெளியாகியதைத் தொடர்ந்து, மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பிலிருந்து, சில சந்தேகங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தங்களிடம் நேரில் ஸ்ரீமதி விழுந்துகிடந்ததாக காண்பிக்கப்பட்ட இடமும், இப்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் மாணவி விழுந்து கிடந்த இடமும் வெவ்வேறாக இருப்பதாகவும், இரு இடங்களுக்கும் இடையில் சுமார் 20 அடிகள் தூரம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், முன்னதாக சந்தேகித்ததை போலவே, தங்கள் மகளது உடல் முழுக்க இரத்தம் இருந்ததாக அதெரிவிக்கப்பட்டது, ஆனால், விழுந்ததாக காண்பிக்கப்பட்ட இடத்தில் ஒரு துளி இரத்தமும் இல்லையே என்று கேள்வி எழுப்பினர். மாறாக, சுவற்றில் மட்டுமே இரத்தக்கறை படிந்த கையின் ஆச்சி பதிந்துள்ளது எப்படி என்று கேட்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சிறிய காட்சியை போலவே, தங்கள் மகள் விழுகின்ற காட்சியையும் வெளியிடலாம், அதற்கு முந்தைய காட்சிகள் உட்பட முழுமையான அனைத்து காட்சிகளையும் வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீமதியை தூக்கிச்செல்லும் ஆசிரியர்
— A1 (@Rukmang30340218) August 3, 2022
#Srimathi #Kallakurichi pic.twitter.com/k5uA26e0DN
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், ஸ்ரீமதி எழுதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய தங்களிடமிருந்து ஸ்ரீமதியின் நோட் புத்தகங்களை வாங்கிச்சென்றுள்ளதாகவும், மேலும் தங்களிடம் சில விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
தற்போது, வெளியாகிவரும் சிசிடிவி காட்சிகளால் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.