கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடலை வாங்க பெற்றோர் சம்மதம்! வெளியான தகவல்
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க, அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விவகாரம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் உடலை வாங்க மறுத்தனர்.
மேலும் ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றமும் பெற்றோரின் மனுவை ஏற்றதால், மாணவியின் உடலை மறு பரிசோதனை செய்ய பொலிசார் ஏற்பாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், தங்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்களை கொண்டுதான் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், உரிய நேரத்தில் மறு உடற்கூராய்வு குறித்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தரப்பட்டதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
newsbugz/dailythanthi
அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும், மாணவியின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கையை கோரிக்கையை தள்ளுபடி செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மாணவியின் உடல் இன்று இரவு அடக்கம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.