ஸ்ரீமதி பெற்றோரை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
* கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்.
* மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் இந்த அரசு மேற்கொள்ளும் என உறுதி
தமிழகத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் இவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை
இது குறித்து சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதி உயிரிழந்து ஒரு மாதம் ஆகும் சூழலில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் நேற்று மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மணவியின் பெற்றோரை சந்தித்து நேற்று ஆறுதல் கூறினர்.
மாணவி ஸ்ரீமதி மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 11, 2022
அதுதான் மாணவிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்! மாணவியின் பெற்றோர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொண்டேன்.
1/3 pic.twitter.com/VL2H0sD426
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், மாணவியின் மரணம் தொடர்பாக தகவல் வந்தபோது கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து மருத்துவமனையில் இருந்ததாகவும், தகவல் அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் இந்த அரசு மேற்கொள்ளும் எனவும் தங்கள் தரப்பு, நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் உரிய நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் மாணவியின் தாய் செல்வியிடம் தொலைப்பேசியில் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவியின் தாயாரிடம் அலைபேசி வாயிலாகப் பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது ஆறுதலைத் தெரிவித்து ‘தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 11, 2022
2/3 pic.twitter.com/DU3ORmn2aV
உங்களுக்கு உகந்த நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். தைரியமாக இருங்கள்...’ என்றார்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 11, 2022
3/3