கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு நீதி கேட்க அவர் தாயார் செல்வி எடுத்துள்ள முடிவு!
ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிகேட்க அவர் தாயார் செல்வி எடுத்த முடிவு
நடைபயணம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்திக்க திட்டம்
ஶ்ரீமதியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் திகதி உயிரிழந்தார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர் தெரிவித்து வரும் நிலையில் சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீமதியின் இறப்பிற்கு நீதி கேட்டு அவர் தாயார் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி கூறுகையில், கடலூர் மாவட்டத்திலிருந்து வரும் வெள்ளிக்கிழமை நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். பின்னர் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என கூறியுள்ளார்
