முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு! இலங்கை தமிழர்களுக்காக அன்றே கமல் நடத்திய ஊர்வலம்: வைரலாகும் புகைப்படம்
நடிகர் கமல்ஹாசன் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடத்திய ஊர்வலத்தின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைகவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டு தரைமாக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன், டுவிட் ஒன்று செய்திருந்தார். அதில், கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது
முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த டுவிட்டருக்கு கீழே ரசிகர் ஒருவர் நீங்கள் இலங்கை தமிழருக்காக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, அதற்கு ரசிகர் ஒருவர் உடனடியாக இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ரசிகர்களுடன் நடத்திய ஊர்வலத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் இப்போது சமூகவலைத்தளங்களில், கமல் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
