ஜாகிர் பாய் சீக்கிரமாக சென்றுவிட்டார்: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைனின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் ஹுசைன்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இதயம் தொடர்பான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைன் (73), நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு நாடளவில் சோகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் இரங்கல்
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் அவரின் மறைவுக்கு இரங்கல் பதிவை, ஜாகிர் ஹுசைன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜாகிர் பாய்! சீக்கிரமாக சென்றுவிட்டார். ஆனாலும் அவர் நமக்கு நேரம் மற்றும் கலை வடிவத்தை நமக்காக விட்டுச் சென்றதற்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். போய்வாருங்கள், நன்றி." என தெரிவித்துள்ளார்.
Zakir Bhai ! He left too soon. Yet we are grateful for the times he gave us and what he left behind in the form of his art.
— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2024
Goodbye and Thank you.#ZakirHussain pic.twitter.com/ln1cmID5LV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |