பிரசாரத்தில் கோபமடைந்து கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை வீசி எறிந்த கமல்ஹாசன்! கமெராவில் சிக்கிய காட்சி
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது கோபமடைந்து கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை வீசி எறிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலகியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், தமிழகம்-புதுச்சேரியில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், மைக் வேலை செய்யாததால் கோபமடைந்து, தனது கையில் வைத்திருந்த கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை வீசி எறிந்தார்.
குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
மக்கள் தனக்காக காத்திருக்கும் போது மைக் வேலை செய்யவில்லை என்ற ஆதங்கத்தில் கமல்ஹசான் அவ்வாறு செய்ததாக மக்கள் நீதி மய்யம் ஊடகப்பிரிவின் மாநில செயலாளர் முரள அப்பாஸ் விளக்கமளித்துள்ளார்.
When @ikamalhaasan lost his 'cool'.. https://t.co/qikSALEJoN pic.twitter.com/SQHPbtdZlH
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) March 31, 2021
கமல்ஹாசன் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.