தமிழ்நாட்டின் பெயரை மாற்றுமாறு கூறுவதா? கொந்தளித்த கமல்ஹாசன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்ற வார்த்தை குறித்து கருத்து தெரிவித்ததற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பேச்சுக்கு கண்டனம்
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அவர் தனது உரையின்போது, 'தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்' என்று கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் முதல் நெட்டிசன்கள் வரை கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் கேள்வி
அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில்,
'நீண்ட நெடிய, போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது; இதை மாற்றச் சொல்வதற்கு ஆளுநர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்றச் சொன்னால் மாற்றிக் கொள்வாரா?' என தெரிவித்துள்ளார்.