தினமும் 5000 பேருக்கு உணவு! நிவாரண பணியை தொடங்கிய கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நிவாரணப் பணிகளை தொடங்கியுள்ளார்.
சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன் வழங்குகிறார்.
Akhila Easwaran
பால் பவுடர், அரிசி, கோதுமை, ரவை, தேநீர் தூள், சர்க்கரை, உப்பு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை 5,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் 5,000 பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யும் பணியை இன்று முதல் தொடங்குவதாகவும், நிலைமை சீரடையும் வரை இப்பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மழைக்கால நோய்த் தொற்றுக்களை கருத்தில் கொண்டு, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கநிபுணர்களிடம் அரசு கலந்துபேசி புதிய வழிவகைகளை காண வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.@ikamalhaasan அவர்கள் இன்று, கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 8, 2023
புயலின் கோர தாண்டவத்தைப் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டினார். இதுபோன்ற… pic.twitter.com/KYjhvW1jgH
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |