கமல் சார் ஷர்மிளாவுக்கு கார் கொடுக்கல...? தந்தை பரபரப்பு தகவல்
கமல் சார் ஷர்மிளாவுக்கு கார் கொடுக்கவில்லை என்று தந்தை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
பெண் பேருந்து ஓட்டுநர்
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா என்ற 24 வயது இளம் பெண் ஒரு தனியார் சிட்டி பஸ்ஸை ஓட்டினார். இளம் வயதில் தைரியத்தோடு பேருந்து ஓட்டிய ஷர்மிளாவின் வீடியோ இணையதளங்களில் வைரலாக, ஒரே நாளில் சாதனைப் பெண்மணியாக மாறினார்.
இவர் தான் இளம் வயதில் பேருந்தை இயக்கிய முதல் பெண்மணி என்று அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை ஷர்மிளாவை பாராட்டினார்கள்.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டி சென்ற பஸ்ஸில் பயணித்தார். அப்போது, ஷர்மிளாவிற்கும், நடத்துனருக்கும் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா பணியிலிருந்து நின்றுவிட்டார்.
கார் கொடுக்கல...?
இந்த செய்தி கமல்ஹாசன் காதுக்கு செல்ல, நேற்று கமல் பண்பாட்டு மையம் சார்பாக ஷர்மிளாவையும், அவரது பெற்றோரையும் நேரில் வரவழைத்து எர்டிகா காரை பரிசாக கொடுத்ததாக செய்திகள் வெளியாயின. சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது.
இந்நிலையில், கமல் காரை பரிசளிக்கவில்லை என்று ஷர்மிளாவின் தந்தை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷர்மிளாவின் தந்தை பேசுகையில்,
கமல் சார் கார் பரிசாக கொடுக்கவில்லை. கார் வாங்க ரூ.3 லட்சத்திற்கான காசோலைத்தான் அட்வான்சாக கொடுத்துள்ளார். என் மகளை சோர்வடையாமல் தைரியாக இருக்க வேண்டும் என்றும், உங்களைப் போல் பல பெண்மணிகள் தைரியத்தோடு முன்னுக்கு வர வேண்டும் என்று அறிவுரை கூறியதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |