கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்! இரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய நபர்.. தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்திய நபரை தொண்டர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பிரச்சாரம் முடிந்த பின்னர் தன் சொகுசு காரில் கிளம்பி உள்ளார்.
அப்போது கமல்ஹாசனின் கார் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார் உடன் வந்த மநீம தொண்டர்கள் அந்த நபரைப்பிடித்து சரமாரியாக தாக்கினர். ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய மர்ம நபர் பின்பு பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்.
மதுபோதையில் இருந்த அவர் பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கார் மீது நடத்திய தாக்குதலில் கமல்ஹாசன் காயம் இன்றி தப்பினார்.
பின்னர் வேறொரு காரில் அவர் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். கமல்ஹாசன் காரை தாக்கிய நபர் யார், எதற்காக தாக்கினார் என்பது தெரியவில்லை.
அவர் மதுபோதையில் இருந்ததால் தாக்குதலுக்கான நோக்கம் எதுவும் இருக்காது என்று பொலிசார் கருதும் நிலையில் இது தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.