அமெரிக்க துணை அதிபரான கமலா தனது பாதுகாப்புக்காக கடைபிடிக்கும் ஒரு விடயம்!
அமெரிக்க துணை அதிபரான தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக செய்துள்ள ஒரு விடயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கமலா ஹாரிஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சமயத்தில் கூட காதில் வயர்டு இயர்ஃபோன்களை பயன்படுத்தியே கமலா ஹாரிஸ் பேசினார்.
அவர் எப்போதுமே புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை. அவர் புளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தாததற்கு காரணம் புளூடூத் இணைப்புகளை ஹேக் செய்ய முடியும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன.
புளூடூத் இணைப்பை வேறொருவர் ஹேக் செய்து சாதனத்தைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற தகவலை அவர்கள் அறிய முடியும்.
கடவுச்சொற்கள் அல்லது பிற முக்கிய தகவல்களைப் பகிர்வதற்கு புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்று தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, ஹாரிஸ் வகிக்கும் உயர் பதவியைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தை எச்சரிக்கையுடன் கையாள்கிறார் என தெரியவந்துள்ளது.