விரைவில் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராவார்... அதிபர் தடுக்கி விழுந்ததை கண்டுகொள்ளாத ஊடகங்களை விளாசிய ட்ரம்பின் கணிப்பு
அமெரிக்க அதிபர் தடுக்கி விழுந்ததை கண்டுகொள்ளாத அமெரிக்க ஊடகங்களை விளாசியுள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப், விரைவில் கமலா ஹாரிஸ் அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என கணித்துள்ளார்.
சமீபத்தில், அட்லாண்டா செல்வதற்காக விமானத்தில் ஏறும்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை படிக்கட்டுகளில் தடுமாறி, மூன்றாவது முறை விழுந்தே விட்டதைக் காட்டும் வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி மனதை பதறவைத்தன.
சர்வதேச ஊடகங்கள் அதை தலைப்புச் செய்தியாக்க, அமெரிக்க ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை.
அது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபரான ட்ரம்ப், ஜோ பைடன் தடுக்கி விழுவதைப் பார்க்க பயங்கரமாக இருந்தது, ஒரு முறை இரு முறை அல்ல, மூன்று முறை அவர் தடுமாறினார்.
ஆனால், ஒரு அமெரிக்க ஊடகம் கூட அதைக் குறித்து செய்தி வெளியிடவில்லை, பத்திரிகை சுதந்திரமே இல்லை என்று கூறியிருந்தார்.
ஜோ பைடன் விழுந்ததைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள ட்ரம்ப், கூடவே இன்னொரு முக்கிய கருத்தையும் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால், அது ட்ரம்பின் கருத்து மட்டுமல்ல, பலருடைய கருத்துகளின் எதிரொலி எனலாம்.
ஜோ பைடனின் மூளையின் செயல்பாடு குறைந்துகொண்டே வருவதாக தெரிவித்த ட்ரம்ப், அவர் பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுகிறார்.
ஆனால், அவர் தான் எதில் கையெழுத்திடுகிறோம் என்பதை புரிந்துகொண்டுதான் கையெழுத்திடுகிறாரா என்பது வியப்பாக இருக்கிறது என்கிறார்.
ஜோ பைடனில் செயல்பாடுகள் இப்படி தடுமாற்றமாக இருக்கும் பட்சத்தில், அவரது கட்சியினர் 25ஆவது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி, கமலா ஹாரிஸை அதிபராக பொறுப்பேற்க வைக்கும் ஒரு சூழல் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்!


