நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் சென்ற கமல்ஹாசன்
இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தைச் சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று மதியம் சென்னை திரும்பினார்.
உடல்நலக்குறைவு
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் உடல் நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல், இருமல், சளி காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை! #KamalHaasan @ikamalhaasan pic.twitter.com/J2Pq6kOOUJ
— Diamond Babu (@idiamondbabu) November 24, 2022

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.