பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை
75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறவோம்.. மறவோம்! 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் பிரித்தானிய மகாராணி முன்னிலையில் படமாக்கப்பட்ட காட்சியில், ஒரு கடலையோ காற்றையோ, காட்டையோ குத்தகைக்கோ, வாடகைகைக்கோ சொந்த கொண்டாடவோ முடியும் எனும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? யார் நீங்கள்.
Pinterest
இது என் நாடு.. என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன், நாளை என் சாம்பலின் மீது என் மகன் நடப்பான் எனும் வசனத்தை பேசினேன். இது சினிமாவிற்காக எழுதிய வசனம் அல்ல. என் உள்ளத்தில் இருந்த தீ.
என் உளவுத்தீ இன்னமும் அணையவில்லை, தியாக மறவர்கள் தங்கள் இன்னுயிரை சொந்த வாழ்க்கையை சொத்து சுகங்களை இழந்து பன்னெடுங்காலம் போராடி பெற்றது இந்த சுதந்திரம் என்பது நம் வரலாறு. வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை. வளர்த்துக்கொள்வோம்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/mtGsE0NAoF
— Kamal Haasan (@ikamalhaasan) August 14, 2022