விஜய்யின் தவெகவில் இணைந்த காமராஜரின் பேத்தி, நடிகரின் மகன்
காமராஜரின் பேத்தி மயூரி மற்றும் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தவெகவில் இணைந்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு தமிழக அரசியல் களம் என பரபரப்பாக உள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதல்முறையாக களம் காண உள்ள நிலையில், அதன் மீது இளம் தலைமுறை வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தவெகவில் இணைந்த பிரபலங்கள்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் என மூத்த அரசியல் தலைவர்கள் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று இணைந்தனர்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உறவினர் மயூரி, விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். முன்னதாக 2014 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த இவர், அங்கிருந்து விலகி 2016 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.

மேலும், தவெக கொள்கை தலைவர்களில் ஒருவரான வேலு நாச்சியாரின் குடும்ப உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் 3வது மகள் கேத்ரின், எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் மகனும், ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த ராஜ் மோகன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |