உடல் வலுவிற்கு சத்தான கம்பு கூழ்.., வீட்டிலேயே செய்வது எப்படி?
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கம்பு கூழை குடித்து வருவதால் உடல் நன்கு வலுவடையும்.
அந்தவகையில், உடல் வலுவிற்கு சத்தான கம்பு கூழ் கம்பு கூழ் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு- 2 கப்
- தயிர்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பை சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் கழுவி வைத்த கம்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரைத்த கம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதனை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறி நன்கு கெட்டியாகி வந்ததும் அடுப்பை அணைத்து இதனை ஆறவைக்கவும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் ஆறவைத்த கம்பு சேர்த்து அதில் தயிர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |