தினம் ஒரு லட்டு.. சட்டுன்னு உடல் எடையை குறைக்கலாம்: எப்படி செய்வது?
உடல் எடையை குறைக்க விரும்புவோர் கம்பை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
மேலும் கம்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல்வேறு நோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
எண்ணில் அடங்கா மருத்துவ நலன்களை வழங்கும் கம்பு வைத்து ருசியான லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு மாவு- 250g
- வெல்லம்- 200g
- பாதம் பிசின்- 4 துண்டு
- பாதம்- 5
- முந்திரி - 5
- பிஸ்தா - 5
- நெய்- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கம்பு மாவை மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பாதம் பிசின் சேர்த்து பொரிந்து வரும்வரை வறுக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரையும் வரை காய்ச்சவும்.
இறுதியாக ஒரு பாத்திரதத்தில் வறுத்து வைத்த கம்பு மாவு, பாதம் பிசின், நறுக்கிய பாதம், முந்திரி, பிஸ்தா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
பின் வெல்லப்பாகை வெதுவெதுப்பாக இருக்கும்பொழுது, கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து உருண்டையாக பிடித்தல் ஆரோக்கியமான கம்பு லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |