நிலநடுக்கத்தால் சேதமடைந்த ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தளம்
ரஷ்யாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் முக்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தளம் சேதமடைந்துள்ளதாக NewYork Times செய்தி வெளியிட்டுள்ளது.
Planet Labs எனும் வணிக செயற்கைக்கோள் இமேஜிங் நிறுவனம் எடுத்துள்ள புகைப்படத்தில், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள Rybachiy நீர்மூழ்கி கப்பல் தளம் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தளத்தின் ஒரு பகுதி அதன் நங்கூர புள்ளியில் இருந்து உடைந்து நகர்ந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த ஒரு பகுதியைத் தவிர வேறு எந்த பாரிய சேதமும் இருப்பதாக அந்த செயற்கைகோள் படங்கள் காட்டவில்லை.
இந்த நீர்மூழ்கிக்கப்பல் தளம், ரஷ்யாவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளுக்கான முக்கிய தளமாக உள்ளது. இது ரஷ்யாவின் பசிபிக் கடற்படைக்கான மூலோபாய மையமாகவும் இயங்குகிறது.
ரஷ்யாவின் கிழக்கில் கம்சட்கா கடற்கரையில் கடந்த வாரம் புதன்கிழமையன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பிரென்ச் பாலினேசியா மற்றும் சிலி வரை சுனாமி எச்சரிக்கையை தூண்டியது.
அதனைத் தொடர்ந்து கம்சட்காவில் உள்ள Krasheninnikov எரிமலை சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kamchatka earthquake 2025, Russia nuclear submarine base, Rybachiy submarine base damage, 8.8 magnitude Kamchatka quake, Pacific Fleet submarine base, Russia tsunami earthquake sub base, Rybachiy pier damage post‑quake, Russian submarine base news, Russia military infrastructure earthquake, Kamchatka naval base satellite images