லண்டனில் விளையாட கனவு கண்டேன்: இப்போது நனவாகிவிட்டது - இலங்கை வீரர் உருக்கம்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட வேண்டும் என கனவு கண்டது தற்போது நிறைவேறிவிட்டதாக இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானம்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடுகிறது.
முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், லார்ட்ஸில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
முன்னதாக, இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் லண்டனின் லார்ட்ஸ் மைதானம் குறித்து உருக்கத்துடன் பேசினார்.
கனவு நனவாகியுள்ளது
அவர் கூறுகையில், "லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என் கனவாக இருந்தது. நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது, லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். தற்போது அந்த கனவு நனவாகியுள்ளது. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
ஓல்டு டிராஃபோர்டில் பாரிய கூட்டம் இருந்தது, இங்கேயும் அதே காட்சிதான் இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு மட்டும் அல்ல, எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என்பது கனவு.
நாங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியையும் வென்றதில்லை. இதை வெல்ல முடிந்தால், அது அப்படி எதுவும் இருக்காது. லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்டில் வெற்றி பெறுவதுதான் வெற்றிகரமானதாக இருக்கும்" என தெரிவித்தார்.
கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) முதல் டெஸ்ட் போட்டியில் 183 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் குவித்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |