எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு: பாக். கிரிக்கெட் வாரியம் மீது அக்மல் கண்டனம்- நடந்தது என்ன?
எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் பாக்.கிரிக்கெட் வீரர் அக்மல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை வைத்த பாகிஸ்தான் அணி
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோம்பர் 5ம் திகதிதொடங்கி நவம்பர் 19ம் திகதிவரை நடைபெற உள்ளது. முதல் போட்டி நவம்பர் 19-ம் திகதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்த அட்டவணையில் சென்னையில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் எதிர்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்காது. இதனால் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
கண்டனம் தெரிவித்த அக்மல்
இதற்கு அந்நாட்டு முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இந்திய அணியை சொந்த மண்ணிலேயே தோற்கடித்துள்ளன. கிரிக்கெட் வீரர்களின் கவனம் எல்லாம் விளையாட்டில்தான் இருக்க வேண்டும். நாங்கள் விளையாட சென்னை மைதானத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாது.
இந்த கோரிக்கை முதலில் விடுத்திருக்கவே கூடாது. இந்த கோரிக்கைகள் சர்வதேச கிரிக்கெட்டில் எடுபடாது. சர்வதேச கிரிக்கெட் முன்புபோல் இல்லை. இந்த மாதிரியான கோரிக்கைகளை வைத்து நீங்களே உங்களை கேவலப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |