கோவில் பிரசாதம் சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?
Kanchipuram
Healthy Food Recipes
Idli
By Kirthiga
காஞ்சிபுரம் என்றாலே கோவிலின் சிறப்பு தான் பலருக்கும் தெரியும். கோயில் என்றால் பிரசாதம்.
அப்படியொன்று தான் காஞ்சிபுரம் கோயிலில் வழங்கப்படும் கோவில் பிரசாதம் இட்லி. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியமாக இந்த இட்லி வைக்கப்படுகிறது.
இந்த இட்லியின் சுவைக்கு வேறு எந்தவொரு இட்லியின் சுவையும் ஈடாகாது. இதை சாப்பிடுவதற்கு நீங்கள் காஞ்சிபுரம் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இனி நீங்களே வீட்டிலேயும் செய்யலாம் அது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- தண்ணீர் தண்ணீர் - 1 கப்
- தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 கப்
- தண்ணீர் தயிர் - 4 மேசைக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- நெய் - 2 மேசைக்கரண்டி
- முந்திரி - 1/4 கப்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 மேசைக்கரண்டி
- சீரகம் - 1 மேசைக்கரண்டி
- இஞ்சி - 1 துண்டு
- பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- சுக்கு பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை
- பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஊறிய பச்சரிசி, உளுத்தம் பருப்பை தனித்தனியாக மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அடுத்து அரிசி மாவுடன் உளுத்து மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- பின்பு இதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரியை போட்டு நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும்.
- மீண்டும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, இடித்த மிளகு, இடித்த சீரகம், நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும்.
- அடுத்து இதனுடன் சுக்கு பொடி சேர்த்து மாவை நன்கு கலந்து விடவும்.
- இட்லியை வேகவைக்க கப்பில் எண்ணெய் தடவி பாதி அளவு மாவை ஊற்றவும்.
- கப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டு எடுத்தால் சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்!
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US