அழகிய பெண்ணை உலகிற்கு வரவேற்கிறோம்! 3வது பிள்ளைக்கு தந்தையான கேன் வில்லியம்சனின் பதிவு வைரல்
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பெண் பிள்ளைக்கு தந்தையாகியுள்ளார்.
3 வது பிள்ளை
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் சாரா தம்பதிக்கு 3 வயது மகளும், ஒரு வயதில் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், கேன் வில்லியம்சன் - சாராவுக்கு 3வதாக பெண் பிள்ளை பிறந்துள்ளது. தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வில்லியம்சன் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், 'தற்போது மூன்றாகியிருக்கிறது. அழகிய பெண்ணை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். உங்கள் பாதுகாப்பான வருகைக்கும், உற்சாகமான பயணத்திற்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
வைரல் பதிவு
மூன்றாவது முறையாக தந்தையான கேன் வில்லியம்சனுக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்துக்கள் லெஜண்ட் எனது வில்லியம்சனின் பதிவுக்கு கருத்து பதிவிட்டுள்ளார். கேன் வில்லியம்சனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான கேன் வில்லியம்சன் 98 டெஸ்ட் போட்டிகளில் 8,666 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |