லக்னோ அணியில் இணைந்த முன்னாள் SRH அணித்தலைவர்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இந்த டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்து, புதிய வீரர்களை அணியில் இணைத்து அணியை பலப்படுத்தும்.
கேன் வில்லியம்சன்
இந்த மாற்றங்கள் அணி வீரர்களோடு மட்டுமல்லாமல், அணியின் பயிற்சியாளர், ஆலோசகர்கள் தரப்பிலும் நடைபெற்று வருகிறது.
இதன்படி, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையிலான நியூஸிலாந்து அணி, 2021 டெஸ்ட் உலகக்கோப்பையை வென்றது.
ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அணித்தலைவராக செயல்பட்டுள்ளார். 2025 ஐபிஎல் தொடருக்கு எந்த அணியிலும் இவர் வாங்கப்படவில்லை.
இந்நிலையில், லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த ஜாகீர்கான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, ரிசப் பண்ட் லக்னோ அணியின் அணித்தலைவராக உள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரும், லான்ஸ் குளூஸ்னர் மற்றும் விஜய் தஹியா உதவி பயிற்சியாளராகவும் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |