சாம்பியன்ஸ் டிராஃபியில் புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ஓட்டங்களை எட்டி வரலாறு படைத்தார்.
கேன் வில்லியம்சன் சாதனை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சதம் விளாசினார்.
வில்லியம்சன் 94 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்தார். இது அவரது 15வது ஒருநாள் சதம் ஆகும்.
இந்த சதத்தின் மூலம் கேன் வில்லியம்சன் (Kane Williamson) 19,000 சர்வதேச ஓட்டங்களை எட்டினார். இந்த மைல்கல்லை விரைவாக (440 இன்னிங்ஸ்) எட்டிய 4வது வீரர் எனும் பெயர் பெற்றார்.
இதற்கு முன் விராட் கோஹ்லி (399), சச்சின் டெண்டுல்கர் (432), பிரையன் லாரா (433) ஆகியோர் 19,000 ஓட்டங்களை கடந்திருந்தனர்.
மேலும் 19,000 ஓட்டங்களை எட்டிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் புதிய வரலாற்றையும் வில்லியம்சன் படைத்தார்.
அதிக சர்வதேச ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து வீரர்கள்
- கேன் வில்லியம்சன் - 19,075 ஓட்டங்கள் (440 இன்னிங்ஸ்)
- ராஸ் டெய்லர் - 18,199 ஓட்டங்கள் (510 இன்னிங்ஸ்)
- ஸ்டீபன் பிளெம்மிங் - 15,289 ஓட்டங்கள் (462 இன்னிங்ஸ்)
- பிரெண்டன் மெக்கல்லம் - 14,676 ஓட்டங்கள் (474 இன்னிங்ஸ்)
- மார்ட்டின் கப்தில் - 13,463 ஓட்டங்கள் (402 இன்னிங்ஸ்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |