கேன் வில்லியம்சன் இல்லை: வெளியான அணி விபரம்..ரசிகர்கள் ஏமாற்றம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது.
டி20 தொடரில் விளையாட உள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரர் கேன் வில்லியம்சனின் பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து பயிற்சியாளர் ராப் வால்டர் கூறுகையில், "கடந்த ஒரு மாதமாக வில்லியம்சன் ஒரு சிறிய மருத்துவப் பிரச்சனையை எதிர்கொண்டார். அவர் குணமடைய அதிக நேரம் தேவை. அவர் வெளிப்படையாக ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர்.
இந்த இரண்டு வாரங்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கும், அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்திற்கும் அவர் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
முன்னதாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கேன் வில்லியம்சன் (Kane Williamson), ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தையும் தவறவிட்டார்.
தற்போது அவர் இங்கிலாந்து டி20 தொடரிலும் விளையாட மாட்டார் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அணி விபரம்:
மிட்செல் சான்ட்னர் (அணித்தலைவர்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டுஃபி, ஜக் ஃபாக்ஸ், மேட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமிசன், டேர்ல் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம் செய்பெர்ட்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |