பாகிஸ்தானை முடித்துவிட்ட தமிழர்! சதத்தை தவறவிட்ட வீரர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 378 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது.
ஷான் மசூட், இமாம்-உல்-ஹக் கூட்டணி
லாகூரில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
அணித்தலைவர் ஷான் மசூட் (Shan Masood) 76 ஓட்டங்களும், இமாம்-உல்-ஹக் 93 ஓட்டங்களும் எடுத்து வலுவான தொடக்கம் அமைத்தனர்.
அடுத்து செனுரன் முத்துசாமி பந்துவீச்சில் சௌத் ஷக்கீல் முதல் பந்திலேயே அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
செனுரன் முத்துசாமி மிரட்டல்
பின்னர் பாபர் அஸாம் 23 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நெருக்கடி கொடுத்த முகமது ரிஸ்வானின் (75) விக்கெட்டையும் செனுரன் முத்துசாமி கைப்பற்றினார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 93 ஓட்டங்களில் இருந்த சல்மான் அஹா அவுட் அஹாவும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 378 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மிரட்டலாக பந்துவீசிய தமிழரான செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளும், ப்ரெனலன் சுப்ராயன் 2 விக்கெட்டுகளும், ரபடா மற்றும் ஹார்மர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |