இங்கிலாந்தின் 2 கிளப் அணிகளில் விளையாட கையெழுத்திட்ட கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மிடில்செக்ஸ் மற்றம் லண்டன் ஸ்பிரிட் ஆகிய இரண்டு அணிகளில் விளையாட கையெழுத்திட்டுள்ளார்.
கேன் வில்லியம்சன்
கோடை சீசன் முழுவதும் பலமுறை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (Kane Williamson) லார்ட்ஸில் இடம்பெறப் போகிறார்.
இங்கிலாந்தின் கவுண்டி கிளப் அணியான மிடில்செக்ஸில் விளையாடவும், லண்டன் ஸ்பிரிட் அணியில் விளையாடவும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த தகவலை மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்துவதாக மரிலேபோன் கிரிக்கெட் கிளப் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் வில்லியம்சன் மிடில்செக்ஸ் அணிக்காக 14 Vitality Blast போட்டிகளில், குறைந்தது 10 போட்டிகளில் விளையாட உள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப்
அதேபோல் சீஸனின் இரண்டாம் பாதியில் குறைந்தது 5 Rothesay கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் விளையாடுவார்.
மேலும், 100 பந்து கிரிக்கெட் தொடரில் கேன் வில்லியம்சன் லண்டன் ஸ்பிரிட் அணியை வழிநடத்துவார்.
முன்னதாக, இங்கிலாந்தில் Gloucestershire மற்றும் Yorkshire அணிகளுக்காக வில்லியம்சன் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |