ட்ரெண்டிங்கில் #Resign_PM_Modi ஹாஷ்டாக்! பரப்பை ஏற்படுத்திய நடிகை கங்கனாவின் ட்வீட்
ட்விட்டரில் ட்ரேண்டாகி வரும் பிரதமர் நரேந்திர மோடியை ராஜினாமா செய்யக் கோரும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் #Resign_PM_Modi என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதல் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தியாவில் தொற்றுநோய்களின் இரண்டாவது அலைக்கு பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய நெட்டிசன்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனது டீவீட்டில் "மோடி ஜிக்கு எப்படி வழிநடத்துவது என்று தெரியாது, கங்கனாவுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாது, சச்சினுக்கு பேட்டிங் செய்யத் தெரியாது, லதா ஜிக்கு பாடுவது எப்படி என்று தெரியாது, ஆனால் இந்த ட்ரோல் செய்பவர்களுக்கு எல்லாம் தெரியும், தயவுசெய்து பதவி விலகுங்கள் மோடி ஜி, பிறகு இந்த ட்ரோல்களை உருவாக்கவும் விஷ்ணு அவதாரங்கள் இந்தியாவின் அடுத்த பிரதமரையம் ட்ரோல் செய்யட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகையின் ட்வீட் குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், கோவிட் -19ன் இரண்டாவது அலை இருக்கும் நேரத்தில் கும்பமேளா மற்றும் தேர்தல் பேரணிகள் போன்ற வெகுஜன கூட்டங்களை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக்கூடாது என்று சில பயனர்கள் கூறியிருந்தனர்.
மேலும், அவர் ஒரு நாட்டின் பிரதமராக செயல்பட்டு, அவர் பொறுப்பேற்க வேண்டும், அனைவருக்கும் அவர் இந்த சூழ்நிலையில் சரி செய்வார் என்று உறுதியளிக்க வேண்டும் என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
Modi ji does not know how to lead, Kangana does not know how to act, Sachin does not know how to bat, Lata ji does not know how to sing, magar these chindi trolls know everything, please #Resign_PM_Modi ji and make one of these Vishnu avatar trolls next Prime Minister of India ?
— Kangana Ranaut (@KanganaTeam) April 27, 2021
இதற்கிடையில் பிரதமர் மோடி மற்றும் கங்கனா ஆகியோரை ஆதரித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பயனர் "நீங்கள் ஏன் ஒவ்வொரு காரணத்திற்காகவும் மோடிஜியை எப்போதும் குற்றம் சாட்டுகிறீர்கள். இந்த நிலைமைக்கு நாமும் பொறுப்பாளிகள் தான், நாம் சமூக இடைவெளியை பராமரிக்கவில்லை, முகக்கவசம் அணியவில்லை" என்றார்.
மேலும், மாநில அரசுக்கு முடிவுகளை எடுக்க அனைத்து உரிமைகளும் இருக்கிறது, அவர்கள் ஏன் எடுக்கவில்லை என்றும் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், #Resign_PM_Modi ஹாஷ்டாகை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பயனர்கள் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.