அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: மூன்று பேர் பலி
அமெரிக்காவின் கேன்சஸ் சிட்டி பாரில், திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 2 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்திலுள்ள கன்சாஸ் சிட்டி பாரில், அடையாளம் தெரியாத நபரால் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சுட்டில் 41 வயது மதிக்கதக்க காவலரும், மற்றும் மது கூடத்திலிருந்த இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
@twitter
நள்ளிரவில் சரியாக 1.30 மணிக்கு மது கூடம் மூடப்படும் சமயத்தில், மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அப்போது மதுகூடத்தின் காவலாளி ஜாசோன் மெக்கனெல் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்னதாக மதுக்கூடத்தில், ரேப் பாடகர் ஒருவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றதென மதுகூடத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
@foxnews
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, முதலுதவி செய்துள்ளனர். பலியானவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் ஒருவர் மதுக்கடைக்குள்ளும், மற்றொருவர் கட்டிடத்திற்கு வெளியே உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
@twitter
திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை, மேலும் அவர்கள் சுடப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.