34 வயது காந்தாரா பட நடிகர் மயங்கி விழுந்து மரணம்! திருமண விழாவில் அதிர்ச்சி சம்பவம்
காந்தாரா 2 படத்தில் நடித்து வந்த ராகேஷ் பூஜாரி, திடீர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகேஷ் பூஜாரி
கன்னட மற்றும் துளு நடிகரான ராகேஷ் பூஜாரி, பிரபல ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான கொமெடி கில்லாடிகலு 3யின் வெற்றியாளர் ஆவார்.
இவர் மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார்.
திடீர் மாரடைப்பு
இந்த நிலையில், உடுப்பிக்கு அருகில் உள்ள நிட்டேயில் நடந்த திருமணத்தின் மெஹந்தி விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |