கனடாவில் இந்திய பிரபலத்தின் தேநீர் விடுதி மீது துப்பாக்கிச் சூடு... ஒரே மாதத்தில் இரண்டாவது முறை
கனடாவின் சர்ரேயில் உள்ள நடிகர் கபில் சர்மாவின் தேநீர் விடுதியில் இந்த மாதம் இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மும்பை நகரில் நடத்தப்படும்
இந்த விவகாரம் தொடர்பில் கோல்டி தில்லான் என்கிற குர்ப்ரீத் சிங் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோர் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு பதிவிட்டுள்ளனர்.
குறைந்தது 25 முறை துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. மட்டுமின்றி, தாக்குதல் சம்பவத்தின் இடையே, தங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என்றால், அடுத்த தாக்குதல் மும்பை நகரில் நடத்தப்படும் என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பேசுவது வெளியான காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து மும்பை காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 10ம் திகதி முதல் தடவையாக கபில் சர்மாவின் புதிதாக தொடங்கப்பட்ட தேநீர் விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சமூகத்தின் உணர்வுகளை
அப்போது சில ஊழியர்கள் தேநீர் விடுதிக்குள் இருந்துள்ளனர். ஆனால் எவரும் அந்த தாக்குதலில் காயம்படவில்லை. குறைந்தது 10 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த நிலையில், ஜூலை 10 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் பொறுப்பேற்றதாக தகவல் வெளியானது.
மேலும் சீக்கிய சமூக மக்களின் பாரம்பரிய உடை தொடர்பில் கபில் சர்மா நிகழ்ச்சி ஒன்றில் பகடி செய்ததாகவும், இது தங்கள் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் பயங்கரவாதக் குழுவான பாபர் கல்சா இன்டர்நேஷனல் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஜூலை 10 ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஹர்ஜித் சிங் லட்டி என்பவர் பொறுப்பேற்றார். கனேடிய அரசாங்கத்தால் BKI ஒரு பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பின் மிகவும் தேடப்படும் பட்டியலிலும் லட்டி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |