கோஹ்லியும், சச்சினும் கிரிக்கெட் மூலம் கோடீஸ்வரர்கள் ஆகும் போது இது முடியாதா? பிரபல ஜாம்பவான் ஓபன் டாக்
கால்ஃப் டூர் ஆஃப் இந்தியாவின் வாரிய உறுப்பினராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பேசியுள்ளார்.
கபில்தேவ் அளித்த பேட்டியில், நான் பிஜிடிஐ-யில் உறுப்பினராக இணைந்தது கால்ஃப் ஆட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காகத் தான்.
கோஹ்லியும், சச்சினும் கிரிக்கெட் மூலம் பணக்காரர்கள் ஆக முடியும் என்றால் ஒரு திறமையான கால்ஃப் வீரரால் ஏன் ஆக முடியாது?
கால்ஃபுக்குள் பண முதலீட்டைக் கொண்டு வர முடிந்தால் இதனை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள் அரசு அதில் பெரிய அளவில் பங்களிக்கவில்லை.
எல்லா விளையாட்டுக்களும் இப்படி இருக்க வேண்டும். விளையாட்டுக்கு உதவுவோம், அதுதான் முக்கியம் என கூறியுள்ளார்.