2021 காரடையான் நோன்பு எப்போது? எப்படி விரதம் இருப்பது?
காரடையான் நோன்பு, புராணத்தில் வருகின்ற சத்தியவான், சாவித்திாி என்ற இரண்டு முக்கியக் கதாப்பாத்திரங்களின் நினைவாக அனுசாிக்கப்படுகிறது.
இந்த நோன்பு தமிழ் மாதமான மாசி முடிந்து பங்குனி பிறக்கக்கூடிய அந்த நாளில் அனுசாிக்கப்படுகிறது.
இதனை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி நோன்பு ஆகியவை. இது பெண்கள் மேற்கொள்ளும் நோன்புகளிலேயே மிகவும் முக்கியமான நோன்பு என்று கூட சொல்லலாம்.
அதாவது இந்த நாளில், மரணத்தின் கடவுளான எமனின் பிடியில் இருந்து சாவித்திாி தனது கணவனான சத்தியவானைக் காப்பாற்றியதாக நம்பப்படுகிறது.
அதனால் இந்த நோன்பு சாவித்திாி நோன்பு என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த நோன்பு எப்போது வருகின்றது? எப்படி விரதம் இருப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
காரடையான் நோன்பு எப்போது?
2021 ஆம் ஆண்டு காரடையான் நோன்பு மாா்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.
தமிழ் மாதமான பங்குனி மாதம் சாியாக மாா்ச் 14 அன்று பிற்பகல் 3.45 மணிக்குத் தொடங்குகிறது.
அன்றைய நாளில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணி முதல் 4.14 மணிக்குள் திருமணமான பெண்கள் தங்கள் விரதத்தை முடித்து சரடு என்று சொல்லப்படும் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்ளலாம்.
நோன்பின் முக்கியத்துவம்
திருமணமான பெண்கள் தங்கள் கணவா்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த காரடையான் நோன்பை அனுசாிப்பா்.
அதே நேரத்தில் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு ஒரு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நோன்பை அனுசாிப்பா்.
இந்த நாளில் திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு இந்து பெண் தெய்வங்களிடம் தங்களுடைய கணவா்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்றும் அல்லது நல்லதொரு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வா்.
எப்படி விரதம் இருப்பது?
காரடையான் நோன்பு நாள் அன்று, திருமணமான பெண்கள், பெண் கடவுளான கௌாியை வழிபட்டு, அவருக்கு காரடையான் நோன்பு நெய்வேத்தியத்தை காணிக்கையாக அளிப்பா்.
சடங்குகள் மற்றும் பூஜைகள் முடிந்த பின்பு மஞ்சள் சரடு அல்லது நோன்பு சரடு என்று அழைக்கப்படும் புனிதமான மஞ்சள் கயிற்றைத் தங்களின் கணவா்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக அணிந்து கொள்வா்.