28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர்
Karl Bushby’s 28 year world walk ends in UK: 28 ஆண்டுகளாக உலகை நடைபயணம் செய்துவரும் சாகச வீரர் இப்போது பிரித்தானியாவை அடைந்துள்ளார்.
தாய்நாட்டை அடைந்த பிரித்தானிய சாகச வீரர்
பிரித்தானிய சாகச வீரர் கார்ல் புஷ்பி (Karl Bushby), உலகை நடைபயணம் செய்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாய்நாடான பிரித்தானியாவை அடைந்துள்ளார்.

கார்ல் புஷ்பி உலகை நடைபயணம்
1998 நவம்பர் 1 அன்று, 29 வயதில், அவர் சிலியின் Punta Arenas நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார்.
அவரது இலக்கு, எந்தவிதமான போக்குவரத்து வசதியையும் பயன்படுத்தாமல், உலகை நடைபயணம் செய்து, இறுதியில் இங்கிலாந்தின் Hull நகரில் உள்ள தாயின் வீட்டை அடைவதாக இருந்தது.

Bushby தனது பயணத்தில் 29 நாடுகளை கடந்து, சுமார் 50,000 கிலோமீட்டர் நடைபயணம் செய்துள்ளார். அவர் தென் அமெரிக்காவிலிருந்து தொடங்கி, மத்திய அமெரிக்கா, அமெரிக்கா, கனடா வழியாக வடக்கு நோக்கி சென்றார்.
பின்னர் Bering Strait-ஐ கடந்து, சைபீரியா, மங்கோலியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளையும் கடந்தார். அவரது பயணத்தில் பல சவால்கள் இருந்தன. Caspian கடலை கடக்க 31 நாட்கள் எடுத்தது.
தடைகள்
விசா தடைகள், 2007-08 நிதி நெருக்கடி, Covid-19 தொற்றுநோய், அரசியல் சூழ்நிலைகள் ஆகியவை அவரது பயணத்தை பலமுறை தாமதப்படுத்தின. இங்கிலாந்து திரும்பும் இறுதி கட்டத்தில், Channel Tunnel வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் English Channel-ஐ நீந்தி கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மூன்று நாட்களில், 20 மணி நேரம் நீரில் கழித்து, Dover அருகே உள்ள Shakespeare Beach-ஐ அடைந்தார்.

“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் காலடி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எளிதாக இல்லை, ஆனால் அதுவே சவாலின் அர்த்தம். நாம் நினைப்பதை விட அதிகம் சாதிக்க முடியும்,” என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
அவரை வரவேற்க அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் Werner Herzog (இந்த பயணத்தை அடிப்படையாகக் கொண்டு Walk of Life என்ற ஆவணப்படம் தயாரிக்கிறார்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
Karl Bushby, Hull நகரை நவம்பர் மாத தொடக்கத்தில் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |