புடினுடனான பேச்சுவார்த்தை கடினமாக இருந்தது! வெளிப்படையாக கூறிய ஆஸ்திரிய அதிபர்
ரஷ்ய அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தை மிகவும் நேரடியாக, வெளிப்படையாக மற்றும் கடினமானக இருந்தது என ஆஸ்திரிய அதிபர் Karl Nehammer தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆஸ்திரியாவின் அதிபர் Karl Nehammer இன்று ரஷ்யா சென்று புடினைச் சந்தித்தார்.
பிப்ரவரி 24 அன்று உக்ரைனன் மீது படையெடுக்கும் படி தனது துருப்புக்களுக்கு உத்தரவிட்ட பிறகு, புடினை சந்திக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Karl Nehammer ஆவார்.
புடினுடனான பேச்சுவார்த்தை முடிந்ததை தொடரந்து, ஆஸ்திரியாவின் அதிபர் Karl Nehammer தனது முதல் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கு ஆதராக வட கொரியா... கிம் ஜாங் உன் அரசு வெளியிட்ட அதிரடி அறிக்கை
ரஷ்ய அதிபருடனான பேச்சு வார்த்தைகள் மிக நேரடியானது, வெளிப்படையானது மற்றும் கடினமானதாக இருந்தது.
புடினுக்கு அவர் அளித்த மிக முக்கியமான செய்தி, உக்ரைனில் போர் முடிவுக்கு வர வேண்டும், ஏனெனில் போரில் இரு தரப்பிலும் தோல்வியுற்றவர்கள் மட்டுமே உள்ளனர் என கூறினேன்.
இந்த விஜயம் நட்புக்குரியது அல்ல என்று கூறிய Karl Nehammer, ஆனால் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிடாமல் புடினை சந்திக்க வேண்டிய கடமையை உணர்ந்தேன் என தெரிவித்தார்.