இந்தியில் மட்டுமே பேசுவேன் என கூறிய SBI மேனேஜருக்கு கர்நாடக முதலமைச்சர் கடும் கண்டனம்
இந்தியில் மட்டுமே பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட SBI மேனேஜருக்கு கர்நாடக முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் கண்டனம்
இந்திய மாநிலமான கர்நாடகாவில், எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் ஒருவர் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து இந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்டார். இதற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இத்தகைய சம்பவங்கள் இனி இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
இந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன். வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |